யார் வரையும்

யார் கைகள்
வரையும் அழகு
ஓவியமோ இது ...
யார் கைகள்
எழுதிடும் சிறு
காவியமோ இது ...
யார் கண்களையும்
தப்பாமல் இழுத்துச்
செல்கிறது இது ..

நீலம் வெள்ளை
என வண்ணங்கள்
இரண்டு மட்டுமே
குழைத்து பூசிச்
வரைகிறாள் இந்த
அதிசய ஓவியத்தை
கொள்ளை அழகில்
கொள்ளை அடித்து
தப்பாமல் எடுத்துச்
செல்கிறாள் மனசை ...

எந்த மந்திரக்காரியின்
கைவண்ணமோ இது
அற்புதஅழகு நீள்கிறது
அதிசயித்து போகிறேன் ...
இந்த தந்திரக்காரியின்
கைகள் தான் வலித்திடாதோ
மாறும்அழகு தொடர்கிறது
உருமாறிமனம் திருடுகிறது
வியந்து போகிறேன் ...

இந்த மாயக்காரியின்
ஓவியங்களின் அழகில்
மயங்கி போகிறேன்
அந்த தேவதையின்
விரல்களை தினமும்
தேடுகிறேன் நீலவானின்
மேகத்துக்கு பின்னே ...

அவள் விரல்களையோ
அவள் விழிகளையோ
மேகங்களுக்கு பின்னால்
என்றாவது கண்டால்
கட்டாயம் சொல்லிப்
போங்கள் நான்
அவளை அனுதினமும்
தேடி கொண்டிருக்கிறேனென்று ,..

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (27-Sep-17, 9:15 am)
Tanglish : yaar varaiyum
பார்வை : 96

மேலே