என் கல்லூரி தோழிக்கு

என் கல்லூரியைப் பூங்காவாய்
மாற்றிய புள்ளிமான்களுள்,
என் நெஞ்சத்தை மோதிய
மான் அவள் (மாணவள்)....
'கொம்பில்லா' தலை கொண்டதால்
சிறு சிறு மோதலும்
இதமாக வருடியது!

என் நாவைப் பிடுங்க
நினைத்த மனிதர்களுள்
நாவசைத்த தமிழ்ச் சொற்களை
தலையசைத்து ரசித்தவள்!

என் கவிதைக் கடலில்
மூழ்கி முத்தெடுத்து
அணிந்து கொண்டவள்!

அரிதாக பேசுபவள்
பெரிதாக பேசினாள்
அவள் மீது நான் கொண்ட
நட்பை!

அவ்வபோது கல்லூரி
இடைவேளையில் உணவைப்
பரிமாறினாள்,
அவள் கைவண்ணத்தைக்
காட்டிய காரணத்தால்
அன்பின் அளவு
காரத்தை தோற்கடித்தது!

'ச்சீ போ' என்ற
வார்த்தையில்
வெளிக்காட்டினாள்,
செல்லப் பிராணிகள்
சண்டையிடும் அழகிய
காட்சியினை!!

நிலவின் பெயர் கொண்ட
என் தோழிக்கு.....
உன்னிடம் பௌர்ணமி
மட்டுமே காண்கிறேன்,
அமாவாசை ஏற்படினும்
கவலைக் கொள்ளாதே,
இருட்டின் நிழலாய்
என்றும் அகலாது
என் நட்பு!!!

எழுதியவர் : தமிழொளி (28-Sep-17, 6:48 pm)
பார்வை : 537

மேலே