காதல்
மேகம் ஏதுமில்லா நீல வான வீதியில்
பூரண நிலவாய் நீ உலா வருகையில்
உந்தன் அழகு அழகுதான் -என்றாலும்
நிலவே, திட்டு திட்டாய் வானில்
பரவலாய் மேகக்கூட்டங்கள் நடுவில்
நீ மறைந்தும் மறையாமல் உலா வருகையில் தான்
உந்தன் அழகு முகத்தை மீண்டும் மீண்டும்
பார்த்து ரசிக்க எண்ணம் தோன்றுது
என்னவளே, எந்தன் காதலியே
நீயும் அந்த நிலவைபோலதான்
உன் அழகையும் அவ்வாறே
நான் ரசிக்கிறேன் , காண்கின்றேன்