இமைக்கா நொடிகள்
பகல் நிலா கண்டேன்
பள்ளிப்பருவத்தில்...
விண்வெளியேருகிறேன்
கல்லூரிக்காலத்தில் ....
இடைபட்டக் காலம்
எனை தேடிய நான் ...
நீயாய் இருந்தேன்
அநேக தேடல்களில் .....
அன்று வயதுகோளாறு
என்று நினைத்துக்கொண்டேன்
விடை அளிக்க வார்த்தைகள்
இல்லாமல் இன்று ....!!
இமைக்கா நொடிகளில்
நீயும் நானும்
இருதய துடிப்போ
எதிரும் புதிரும் .....
மறவாமல் என்னுள் நீ
காணாமல் காதலிக்க ஆரம்பித்தேன்
கவிதையாய் உருவெடுத்தாய்
கவிஞனாய் மாறி நிற்கிறேன் .....
சொல்ல முடியாம போன
காதல் ....
சொல்லாமல் இருக்க முடியா
காதல் ...
கடக்கும் தூரம் நெல்லிக்காய்
காதலுக்கும் சளிபிடிக்க ..
இனிய என்னவளே
இப்போது ..
எனக்காக
மீண்டும் அந்த
"இமைக்கா நொடிகளுக்காக"
வருகிறேன்
மீதி
வாழ்க்கை முழுவதிற்கும்
- கிருஷ் அரி