பட்டாம் பூச்சியை பிடித்து கேட்டுப்பார்

அந்த மலர் தோட்டத்தின் நடுவே
சிறு குழந்தை போல் !
பட்டாம்பூச்சி பிடிக்க
அங்கும் இங்குமாய்
ஓடி யாடி திரிகிறாய் !
பட்டாம் பூச்சியை பிடித்து
கேட்டுப்பார் !
அது உன்னைப்பிடிக்கத்தான்
உன்னை சுற்றி வந்ததாய்
சொல்லும் !
மலர் வாசனை நுகர்வதற்காய்
தேன் பருகி கொள்வதற்காய்
என பதில் வரும்
பட்டாம்பூச்சியிடம் இருந்து !