உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்
பயப்பட வேண்டும்;
தமிழும்;தமிழரின் பண்பாடும்
சிறிதுச்சிறிதாய்
சீர்க்குலைந்துப் போவதை
எண்ணிப் பயப்பட வேண்டும்!!!
மாற்ற வேண்டும்;
பணத்திற்காக மற்றவர்
மனதைக் காயப்படுத்துபவரின்,
வழியை மாற்ற வேண்டும்!!!
எதிர்க்க வேண்டும்;
தீயவழியிலிருந்து,
மாற மனமில்லாதவனை,
வீரத்துடன் எதிரில் நின்று
எதிர்க்க வேண்டும்!!!
கோபம் வேண்டும்;
சமூகப் பிரச்சனைகளைக் கண்டு
உனக்குள்
கோபம் உண்டாக வேண்டும்!!!
சிந்திக்க வேண்டும்;
நமது சமூகம் செழிக்க
நாமே சிந்திக்க வேண்டும்!!!
ஒற்றுமை வேண்டும்;
நமது தாய்மொழியைக் காக்கவும்;
தமிழ் மண்ணினை மீட்கவும்
நம்மிடையே ஒற்றுமை வேண்டும்!!!
அதற்கு,
முதலில் மாற்றம் வேண்டும்!!!
அதுவும் உன்னிலிருந்தே தொடங்க வேண்டும்!!!
இது படிப்பதற்காக அல்ல,
சிந்திக்கவும்;செயல்படுத்தவும்!!!