இந்த இயற்கை முட்டாளின் வரிகள்

காதுகளில் ஹெட்செட்களை மாட்டிக் கொண்டு,
நவீன யுக யோகிகளே வாருங்கள்..
போலி காதல் கீதங்களில் மயக்குண்டு அமைதி தேடிக் கொள்ளுங்கள்...

தனித்தனி ரோபோக்களாய் இருக்கையில் அமருங்கள், சிறக்கட்டும் பெருந்து பயணங்கள்...

கண்களிரண்டும் கைபேசிகளில் ஒருமுகப்பட, யோக நிலையை அடைந்துவிட்டீர்களே எளிதாக...

செல்பி எடுக்கும் நவீன யுக சிற்பிகளே வாருங்கள்.
தன்னைத் தானே நொடிப்பொழுதில் அச்சு அசல் படம் வரையும் விந்தை எங்கு பயின்றீர்களென்று கூறுங்கள்...

நினைத்ததைக் காணும் ஞான திருஷ்டியை கைபேசிக்குள் அடக்கிய நவீன யுக ஞானிகளே உங்கள் ஞானத்தின் நீளமென்ன கூறுங்கள்...

வெளியில் தெரியும் மரஞ்செடி, கொடிகளைக் கொஞ்சம் பாருங்கள்...
உங்கள் நவீன ஞான, யோக, சிற்பகலை மறந்து கொஞ்சம் இயற்கையை இரசிக்க வாருங்களே...

இவனுக்கு வேற வேலை இல்லையென்று முனுமுனுக்கும் கடமை வீரர்களே, உங்கள் முடிவதற்குள் இயற்கையிடம் தரிசனம் பெற்றுவிடுங்களே...

நானே சிற்பம் செய்து நானே அதற்கொரு கோவில் கட்டி, கடவுளென்று அதன் காலில் விழுந்தால் என்னைவிட மூடன் வேறு யாரும் உண்டா?
சிந்திப்பீர் உலகியல் அறிஞர்களே இந்த இயற்கை முட்டாளின் வரிகளை...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (2-Oct-17, 6:21 pm)
பார்வை : 525

மேலே