புதிய ஓட்டம்

விதி வந்து கெடுத்தாலும்
சதி வந்து தடுத்தாலும் அந்த
கதி வந்து நேர்ந்தாலும்
மதி சொல்லே மந்திரம் எனக்கொள் " புதிய ஓட்டம் "
நதி போல் ஓடவைக்கும்

சிலருக்கு சுமையாய் தோன்றுகின்ற ஓட்டம்
பிறரால் வெகுசுலபமாக ஓடிக்காட்ட முடிகிறது
அதிலும் புதுமையான
ஓட்டம் புதிய ஓட்டம்

சிலருக்கு சுலபமாய் தோன்றுவது பிறருக்கு சுமையாக தோன்றுகிறது

இவை இரண்டிற்கும் ஒருவரது மனப்போக்கை ஒத்தே நிகழ்கின்றது
உயர்ந்தது தாழ்ந்தது சுமையானது சுலபமானது
முடியும் முடியாதென்ற
பேச்சுக்கே இடமில்லை

இவையெல்லாம்பிறப்பில் இருந்து வருவதில்லை
நல்ல வளர்ப்பில் இருந்து
பிறப்பது என்பதை யார் உணர்கிறார் ஆராய்வோம்

கூழ் குடித்து பழகியவனுக்கு
மது குடிக்க பழக்குவதும் மது குடித்து பழகியவனுக்கு கூழை கொடுத்தால் அவன் குடிப்பானா உமிழ்வான்

ஒவ்வொரு முறையும் தன் ஓட்டத்தை மேற்கொள்ள அதற்கு பின் வருகிற இடையூரை எதிர்கொள்ள
பலப்படுத்திக் கொள்ள
வைப்பதே புதிய ஒட்டம்
இல்லையெனில் குருக்கு வழிகள் தான் மடியும்வரை
•••••••
நன்றி :
புதிய ஓட்டம்: ஆபிரகாம் வேளாங்கண்ணி யின் கவிதை
By கவிதைமணி | Published on : 02nd October 2017 03:48 PM | )

எழுதியவர் : ஆபிரகாம் வேளாங்கண்ணி (2-Oct-17, 4:49 pm)
Tanglish : puthiya oottam
பார்வை : 166

மேலே