முத்தமிடவா
முத்தத்தின் இலக்கணம்
முரண்பாடுகளோடுதான்
இடத்திற்கும்
வயதிற்கும்
காலத்திற்கும்
பொருளை மாற்றி
தேவையையும்
மாற்றும்
யாவையும் கடந்து நிற்கும்
நீயும் நானும்
ஆயிரம் முறை பரி மாறி கொண்டிருப்போம்
ஓராயிரத்திற்கும் அதிகமான
முத்தங்களை
இரவுகளை தாண்டி
பகலிலும்
பகலில் தொடங்கி
இரவு வரையிலும்
ஆசையோடு
ஆவலோடு
காதலோடு
காமத்தோடு
மெதுவாகவும்
வேகமாகவும்
வெறிதனத்தோடும்
நீ என்னை நனைத்திருக்கின்றாய்
முத்தங்களால்
இது பழைய கதை
பல நாட்களாய்
பசியோடும்
ஆசையோடும்
ஏக்கத்தோடும்
எதிர்பார்ப்போடும்
காத்திருக்கிறேன்
வா நான் முழுவதும்
நனைந்து
மூச்சு முட்டி
முர்ச்சையாகும் வரை வந்து
இடைவெளியின்றி முத்தமிடு
எனக்காய் மட்டும் அல்லாமல்
நம் குழந்தைகளுக்காகவும்
நீ முத்தமிட தயங்குவதால்
மாண்டு போகும் நம் ஆருயிர்
குழந்தைகளையும்
நம்மையும் நம்
குழந்தைகளையும் நம்பி
வறுமையில் வாடும்
விவசாயிகளையும்
பருக கூட வழியின்றி
பரிதாபமாய் இறக்கும்
உயிர்களையும் காண்டால்
பதபதைக்கிறது
என் மனம்
வா என் ஆருயிர் வானமே
உன்னால் இயன்றவரை
இடைவிடாது முத்தமிடு
ஏற்றுகொள்ள
ஏக்கத்தோடு காத்திருக்கின்றேன்
இப்படிக்கு
பூமி
விவசாயிகளின் வேண்டுதலோடு
கொ.சசிகலா