இருட்டு
இரவு நேரம்..
மின் துண்டிக்கப்பட்ட வேளை..
மின் விசிறி காற்றை இழந்து
விதவையாய் நின்ற போது
என் வெளிச்சுவாசம் மேனி மேல் பட
உஷ்ணத்தை உணர்ந்தவளாய்
கால்கள் வெளி நோக்கி நடந்தன...
இருட்டுக்கு பயம் என பின்னங்கால்கள்
பின்நோக்கி இழுக்க
வாழ்க்கை எனும் இருட்டிலே மிதந்தவளுக்கு இயற்கை இருட்டுக்கென்ன பயமா;
என தன்னம்பிக்கை முன்னோக்கி
இழுக்க இரவின் கைகளால் அரவணைக்கப்பட்டு வெளியேறினேன்...
இரவின் இருள், என் மனதின் இருள்
இரண்டிற்குமிடையில் ஓராயிரம் பொருத்தங்கள்...
கருமையால் தீட்டப்பட்ட வானம்..
தனி(மை) யால் பூசப்பட்ட என் உள்ளம்..
மெல்ல வருடிச் சென்ற தென்றல் காற்று..
சகாராவின் மணல் போல் சுடும் சில நினைவுகள்..
போலியாய் புன்னகைத்த என் உதடுகள்
உணர்வுகளுக்கு முள் குற்றிய போது
முண்ணனியில் சாட்சி கூறிய கண்ணீர் துளிகள்..
அனைத்தும் ஒன்றாய் சங்கமித்த தருணமிது...
இரவின் இருளை அகற்றுவதற்காய்
சேவையாற்றிக் கொண்டிருந்த
வெண்ணிலவும் நட்சத்திரங்களும்
கூட என்னை திரும்பி பார்க்கவில்லை...
மின்மினிப்பூச்சிகள் நிலவிற்கு ஒளி எடுத்துச்செல்லும் ஊர்வலத்தில்
இருந்ததால் அவற்றிற்கும் திரும்பி பார்ப்பதற்கு நேரம் கிடைக்கவில்லை போலும்...
விடியல் வரும் நம்பிக்கையில்
இரவு சிரித்துக்கொண்டு தான் இருந்தது...
ஆனால் பாவம் என் கண்ணீர் துளிகள் தான் ஓய்வின்றி சேவையாற்றி கொண்டிருந்தன...
இவளின் ஆரம்பமே இருளென்றால்
பரவாயில்லை ...
இடையில் இடம்மாறிய தடமல்லவா..
உணர்வுகள் ஊனமாகின
உறக்கங்கள் தொலைந்தன
கொஞ்சம் அதிகமாகத்தான் வலித்தது...
இருளின் அடிவேர்களும் இவளுக்குள்ளே
ஒழிக்கப்பட்டன..
இவளின் இருள் வெளிச்சத்தை எதிபார்க்கவில்லை...
இருளின் இளநிறமாவது
தென்படுமா???? என்கின்ற இவளுடைய ஏக்கப்பார்வை..