தமிழ் ட்ரெண்ட்

பண மதிப்பு இழப்பினிலே..
மைய அரசை எதிர்த்தோம்!
ஜல்லிக்கட்டு போரினிலே
மெரினாவில் சிலிர்த்தோம் ...!

தெர்மோகோல் ப்ரொஜெக்ட்யை
மீம்ஸ்லேயே சிதைத்தோம்
தோனியின் சேஸிங்கை
விசிலபோட்டு பொலந்தோம்!!

ஓவியா வெளியேற
மனசெல்லாம் உடைந்தோம்
ஆரவ் பரிசு பெற..
டிவி-யையே உடைத்தோம்!!

ஓடும் வேகத்தில்
நிற்க நேரம் மறந்தாலும்..
அம்பானி ஆசியிலே..
'ஜியோ' கொண்டு இணைந்தோம்..

டேட்டா மயமான..
'4G' - நாட்டில்...
ஹேஷ்டேக் கொண்டே...
தமிழ் இனி வளர்ப்போம்!!

எழுதியவர் : ரஞ்சினி மைந்தன் (5-Oct-17, 6:43 pm)
பார்வை : 310

மேலே