தகவல் தொழில் நுட்ப புரட்சி

தகவல் தொழில் நுட்ப புரட்சி

எவ்வளவு நேரம் வேண்டுமானாலும்
பேசலாம்” இலவசம் தான்
பேச்சு சுதந்திரத்தை மேடையில்
அறிவித்தார் “செல் போன் முதலாளி “

இந்த சுதந்திரத்துக்கா அந்த
காலத்தில் நிறைய தலைவர்கள்
பாடுபட்டார்கள்? தெரியவில்லை

“பல்ஸ் குறைந்து கொண்டிருக்கிறது
மனசுக்குள் திக்..திக்..
இது ஆபத்தான நோயாளியை
பற்றி அல்ல !
எங்கள் செல்போன் பாலன்ஸ்
பற்றித்தான்.

ஒவ்வொரு நொடித்துளியும்
கரையும் செலவு காட்டி
பதை பதைக்க வைத்து
சிக்கனமாய் பேசினாலும்
“டாப் அப் செய்” சொல்லி
தொடர்பை துண்டிக்க வைத்து
திண்டாட வைக்கும் “கை பேசி”

ஓ இதைத்தான் எங்கள் காலத்தில்
“வரும் காலம்” இந்தியாவின்
தகவல் தொழில்நுட்ப புரட்சி
காலம் என்றார்களோ ?

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (19-Oct-17, 10:11 am)
பார்வை : 535

மேலே