தெருவிளையாடல்

ஆனந்தக் கூத்தாடி
குறுகலான தெருக்களிலும்
பட்டாசை கட்டுக்கட்டாய்
வெடித்து அதிரடி ஓசையோடு
வெறியாட்டம் போட்டோம்
நகரெங்கும் புகை மூட்டம்
கந்தகப் புகை வாடை
மூக்கைத் துளைக்குது
இருந்தாலும் நாங்கள்
திருந்தப் போவதில்லை
வருந்தவும் மாட்டோம்.
நாங்கள் பட்டாசானந்தர்கள்
அடுத்த பட்டாசுத் திருநாள்வரை
பொறுத்திருப்போம்
பாயும் புலிகளாய்
பதுங்கி இருபபோம்!
நாங்கள் பட்டாசானந்தர்கள்
காசைக் கரியாக்கும் வள்ளல்கள்!