என் மனைவியாக்க பேச்சு
அழகா ஒன்னு வேண்டி பூமி கேட்டு போச்சு....
அதற்காக தானே முழு நிலவும் படைக்கலாச்சு....
நேத்து பூத்த முழு நிலவு உன் முகத்த பார்த்து போச்சு...
அன்றிலிருந்து அதுவும் தேய்த்து போகலாச்சு ....
உன் காலு கொலுசு செய்ய காலம் பின்னே போச்சு ....
அது கண்ணகி காலமாச்சு ...
அவையில் வக்கீல் வைக்கலாச்சு ....
அங்கே சலங்கை மீட்டாச்சு ....
அதில் கல்லெடுத்து பதுச்சு
உன் கொலுசு செய்யலாச்சு....
உன் அங்கம் தொடும் நகைக்கோ
தங்கம் தோண்டவில்ல....
காலை எழும் மென்கதிரில்
அங்கம் வெட்டியாச்சு ...
மாமல்லன் சிற்பி தேடி பிடிக்கலாச்சு
உன் அழகை பார்த்து அதற்காய்
அணிகள் செய்யலாச்சு....
அர்ஜுனன் வில் போல் உன் புருவம்
இருக்கலாச்சு.....
பாண்டி நாட்டு கொடி விட்டு மீன்கள்
அதில் குடி போகலாச்சு....
கம்பன் வர்ணிக்கா பெண்ணுருவம்
என் காலத்தே தோன்றலாச்சு...
பாஞ்சாலி அழகும் இவளிடம் தோற்றுபோகலாச்சு...
இனி வரும் காலம்
இவள் உருவே உவமையாச்சு...
பிரமன் வந்து உன் அழகை பிரதியெடுப்பதாய் பேச்சு ....
அவன் வரவே தடுக்க தானே
காவல் வைக்கலாச்சு...
இப்படி ஒரு அழகை
என் மனைவியாக்க பேச்சு
அவள் அழகை பார்த்து வாழ
என் கண்கள் பல தவங்கள் இருக்கலாச்சு......
பா.முருகன்