வலியை எடு அல்லது வழியை கொடு

நோகடிக்காதே என்னை சாகடிக்காதே என் நிழலையும்
என்னிடம் இருந்து பிரித்து தூரம் வைக்காதே .
உன் அன்புகளை பிரித்து கோப அலைகளை
ஓடும் உதிரத்தில் கலந்து சாக்கடையாய் மாற்றி நாறடிக்காதே !!!
நங்கூரமாய் என் உதிராக கடலில் பதிந்துவிட்டாய்
நாராசாரமாய் சில வார்த்தைகளை உதிர்த்து பிரிந்துவிட்டாய்


சுவாசம் தொடும் தென்றலிடம் பேசாதவர் யாரும் இல்லை
கருவிலும் இருக்கும் குழந்தையிடம் சென்று கள்ளத்தனமாய் பேசிவிடுவான்
என் அன்பு கருவில் உன் சுவாச தென்றல் சென்று பேசிவிட்டதடி
உன் பிரிவை சொல்ல உயிரும் உள்ளே கூசிவிட்டதடி


என் நினைவுகள் எல்லாம் உன்னுள்ளே அழிந்த காய தழும்புகளோ!!
உன் நினைவுகள் எல்லாம் என்னுளே தழும்புகள் ஆகாத,, ஆறாத காயங்களோ!!

உன் அன்பு கடிகாரத்தினுள் எண்களைப்போல பதிந்து தொட்டு வாழ எண்ணினேன்
இப்படி அம்பு முட்களால் சுழன்று செல்ல..... உன்னை விட்டு எங்கு செல்லுவேன்
செல்கள் இல்லாது எண்களை சுழலாது கடிகாரம் முட்களும்
உன் நினைவில்லாத உயிர் செல்லையும் இதயம் சுழற்றது எந்நாட்களும்


நடுக்கடலில் கலங்கரை விளக்கை காட்டுவது என்ன நாயமடி .
எப்படியாயினும் கப்பல் கடக்கும் ..இந்த கட்டுமரம் என்ன செய்யும்


சம்சாரம் என எண்ணி கயிரு கட்ட விரும்பினேன்
மின்சார கம்பியை கையில் கட்டிவிட்டு செல்கிறாய்

காலம் ஆவதற்குள் நான் காலாவதி ஆவதற்குள் உன் கரம் தொட்டு உயிர் கொடு
காலம் ஆகிவிட்டால் நான் காலாவதி ஆகிவிட்டால் உன் கரம் தொட்டு என் உயிரை எடுத்து விடாதே
என் அன்னைக்காக்க என் அன்னைக்காக நான் வாழவேண்டும் ....

எழுதியவர் : ராஜேஷ் (10-Oct-17, 1:58 pm)
பார்வை : 104

மேலே