பேத்திக்கு பிறந்தநாள் வாழ்த்து
அன்பு செல்லமே கட்டித் தங்கமே
அச்சு வெல்லமே வாழி!
கன்னல் பேச்சிலே உள்ளம் அள்ளினாய்
கன்னித் தமிழென வாழி!
இன்பம் பொங்கிடும் பூத்த நாளினில்
என்றும் வாழ்த்துவேன் பாடி!
தென்றல் காற்றெனத் தேடி உன்வசம்
செல்வம் சேரட்டும் கோடி!