இதுவரை யாரிடமும்

என்ன செய்தாய்
எனக்குள்

சூடு பாலில்
கரைந்து போன
சர்கரையைப் போல
என் உயிருக்குள்
உருவம் இல்லாமல்
நீ கலந்திருக்கிறாய்

கொஞ்சமா தூவிய
காபி பொடிபோல
அதிலே சுவை
கூட்டிச் செல்லுது
காலை சந்திக்கும்
உன் விழிப்பார்வையின்
கருமணிகள்

காலச் சக்கரத்தின்
வேக சுழற்சியில்
அந்த நொடியில்
உன்னையும் என்னையும்
சந்திக்க வைத்ததது
காலனா கடவுளா
என்ற யோசனையில்
கரைகிறது கணங்கள்

இதுவரை எவரும்
பேசாத கதைகளை
என்னிடம்
பேசாமலே பேசிச்
செல்கிறது உன்
உன் விழிகள்

இதுவரை யாரிடமும்
சொல்லாத கதைகளை
உன்னிடம் மட்டுமே
பேசி கழியும்
பொழுதுகளை தேடத்
தொடங்குகிறது என்
தனிமையின் சிறகுகள்

இதுவரை யாரிடமமும்
இழக்காத என்
இதயத்தை உன்
மவுனத்தில் தொலைத்த
ஞ்ஞானியாகிப்போன நான்
காதல் தவத்தில்
உலகம் மறந்த
உன் உலகத்தில்

இதுவரை யாரிடம்
உணராத உணர்வுகளை
எழுப்பி விட்டுச்
செல்கிறது உன்
காலடிச் சத்தங்கள்

இதுவரை யாரிடம்
கொள்ளாத நேசம்
எனக்குள்ளிருந்து வந்து
அருவியென பாய்ந்து
உன்னைத் தேடி
ஓடுகிறது அது
என்னையும் அறியாமாலே

இதுவரை இல்லாத
உலகத்துக்குள் என்னை
வெகு இயல்பாய்
இழுத்துச் செல்கிறாய்
நான் மட்டும்
இயல்புத்தன்மை
தொலைத்து வெகு
நாட்களானது தெரியாமல்
இயல்பாய் என்னை
கடக்கும் நீ

இதுவரை யாரிடமும்
சொல்லாத அந்த
மூன்று வார்த்தைகளை
முழுங்காமல் உன்னிடம்
முழுதாக என்று
சொல்லவேனோ நான்
என்ற ஏக்கத்திலும்
சொல்லி தீர்த்துவிட்ட
ஒத்திகைகளினாலும்
கடந்து போகிறது
என் கனவுகளின்
பொழுதுகள்

எழுதியவர் : யாழினி வளன் (11-Oct-17, 8:04 am)
பார்வை : 128

மேலே