காதலும் சுகமான

காதலும் சுகமான
தாய்மையைபப் போல !
எப்போதும் உன்
நினைவுகளை வலியோடு
சுமக்கும் நான்

காதலும் கொடும்
மரணத்தைப் போல !
எப்போதும் என்னைக்
கொன்று போகும்
உன் பார்வைகள்

காதலும் சுடும்
நெருப்பைப் போல !
எப்போதும் என்னைக்
எரித்துப் போகும்
உன் நினைவுகள்

காதலும் அந்த சுக
சொர்க்கத்தைப் போல !
எப்போதும் என்னை
எங்கோ புதுஉலகுக்கு
கூட்டிச் செல்லும்
சிறகுகள் தரும்
உன் அருகாமையின்
அழகிய தருணங்கள்

காதலும் அந்த எரி
நரகத்தைப் போல !
எப்போதும் என்னை
இறக்கச் சொல்லும்
சித்ரவதைகள் தரும்
உன் அருகாமையில்
நமக்குள்ளான தூரங்கள்...

காதலும் அந்த
கடலைப் போல !
எப்போதும் என்னை
உன் நினைவுகளில்
அழுதிட சொல்லும்
அழுத்தங்கள் தரும்
உன் நினைவுகள்
கொணர்ந்த உப்புநீர்
குடித்த கன்னங்கள் ...

காதலும் அந்த
மேகத்தைப் போல !
எப்போதும் என்னை
உன்பின்னே
இழுத்துச் செல்லும்
மந்திர தந்திரத்துக்குள்
அடைபட்ட நான் ....
வானுக்குள் சிறைப்பட்ட
மேகமாய் உனக்குள்
எதையோ தேடிக்கொண்டு
தேடலோடு சதா சுற்றும்
என் நினைவு மேகங்கள் !


காதலும் இந்த பரந்த
பூமியைப் போல !
எப்போதும் எனக்குள்
அடங்காமல் எழும்
ஆசையின் துளிர்கள்
உன் அன்பை
அப்படியே விழுங்க
வெடித்தபடி காத்திருக்கும்
வறண்ட நிலமாய்
என் காதல் ....
அதில் தினம்
புதிதாய் முளைக்கும்
கனவுகளின் விதைகளில்
ஆசையின் தளிர்கள் ....

அன்பே என் அத்தனையும்
ஆனாயடி நீ தான்
அன்பே என்று என்னை
அத்தான் என்று
சொல்வாயோ என்று
அவஸ்த்தையோடும்
ஆசையோடும் நான் !!

எழுதியவர் : யாழினி வளன் (11-Oct-17, 8:28 am)
Tanglish : kaathalum sugamaana
பார்வை : 124

மேலே