மானம்

இச்சையோடு எம்மை எவர் தொட முற்பட்டாலும்
அவன் எம்மண்ணுக்கு உரமாவான்.
நான் உனக்கே உரியவள் மாமா...

உயிரை விட எம் மானம்
எனக்கு மிகவும் பெரியது...

~ உன் மனைவி பிரபாவதி வீரமுத்து

குறிப்பு :

கற்பில்லா இடமே இல்லை...
ஒழுக்கமே கற்பு...

பெண்ணின் உடலில் மாத்திரமா கற்பு...
ஆணின் உள்ளத்திலும் உண்டு கற்பு...

சொல்லில் உண்டு கற்பு...
செயலில் உண்டு கற்பு...

வன்மம் :
தானே பல் இளித்து
விபச்சாரம் செய்வது
அவமானம்...

தன்னை தற்காத்துக் கொள்ளும்
ஒருவரை அவமானம் செய்வது...
கற்பை இழந்த நிலையாகாது...
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே...

கற்பு என்பது எனைப் பொருத்தவரை
மனதின் திடம்...
எந்நிலையிலும் தன்னிலை மாறாதிருப்பது...

ஒரு பெண்ணை காமக் கொடூரன் வன்மம் செய்தால்
கற்பழிக்கப்பட்டாள் என்று சொல்கிறார்கள்.

ஆனால் அவள் பரிசுத்தமானவள்.
அவள் மனதில் எந்த சலனமும் இல்லை...

மென்மையை வன்மத்தால் அழித்தலுக்கு பெயர்
மானம் போனதா...

தவறு செய்தவன் தான் ..
அவமானப்பட வேண்டும் ..
அவனின் நிலை தான் அங்கு தாழ்ந்தது.

உடலுக்கு மட்டுமில்லை கற்பு ...
மனதிற்கு உண்டு...

செருப்பால் அடிக்க வேண்டியவனை
சிரிப்பால் அடிக்கும் பெண்...
மனதால் எப்பொழுதோ கற்பை இழந்தவள்...

உடல் தூய்மையை விட
மனத்தூய்மையே உயர்ந்தது.

உயிர்களை மதிப்போம்...

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (11-Oct-17, 8:28 pm)
Tanglish : maanam
பார்வை : 146
மேலே