பெண்ணின் மனம்

பெண்களுக்கு ஆசைகள் அதிகம்
அன்பும் அதிகம்
என்றும் அவை ஆண்களுக்கு
நிகராகாது

வசதியாக வாழ்ந்திட ஆசை தான்
ஏழ்மையாய் இருந்தாலும்
அன்பால் அதை
ஏற்று நடப்பால்

அன்பால்
நீ எதையும் சாதிக்கலாம்
பெண்ணின் மனத்தையும்
வெள்ளலாம்

சின்ன சின்ன ஆசைகள்
அவளுக்கு அதில்
பெரிதும் இன்பம்
அவளுக்கு

கைக்கோர்த்து நடக்கவும்
உன் தோள் சாயவும்
உன் நெஞ்சில் முகம்
பதிக்கவும்

உன் கை அவள் கண்ணீரை
துடைக்கவும்
அவள் சமைத்த உணவை
நீ பாரட்டவும்

தினமும் காதல் செய்யவும்
செல்லசண்டை நடத்திடவும்
சண்டையின் சமாதானம்
முத்தமாகவும்

சிறு உதவிகள் அவளுக்கு
நீ செய்திடவும்
உறவு முடிந்தபின்
அவளை அனைத்து
தூங்கவும்

அடிக்கடி கொஞ்சவும்
உன்னுடன் நீண்ட
இரவுப் பயணமும்

உன் முதல் குழந்தை
அவளாகவும்
வசதியான நிலையிலும்
வறுமையான போதிலும்
அன்பை மட்டுமே
எதிர் பார்க்கும்

நரை வந்த போதிலும்
உன் மடி சாய்க்கவும்
உன் உயிர் முன்னால்
அவள் உயிர் பிரியவும்....

எழுதியவர் : srk2581 (11-Oct-17, 10:46 pm)
Tanglish : pennin manam
பார்வை : 256
மேலே