பூங்கா

நெருப்பு நிலா _ 56

பூங்கா
அது
பூக்களின்
பல்கலைக்கழகம்.

அந்தப் பசுமை குஞ்சுகளின்
இதழ்களில் பூவண்ணங்களின்
புன்முறுவல்.

பூக்களின் தலைகோதும்
தென்றல்.

எல்லாப் பருவத்திலும்
பறவைகள் சங்கமிக்கும்
வேடந்தாங்கள்.

யாரோ யாருக்கோ
தினம் தினம்
வகுப்பு நடத்தும்
கிளிகள்.

கொஞ்சம்கூட
குரல்வளையை
கடன்தராத
குயில்கள்.

எழுதியவர் : கேப்டன் யாசீன் (11-Oct-17, 11:13 pm)
Tanglish : poongaa
பார்வை : 543

மேலே