அவளும் நானும்

காதலது உச்சம்பெற
பேசவார்த்தையில்லை அங்கே

மோகமொன்று பிறக்கவே
தொட்டயிடமெல்லாம் சிலிர்த்தது

கொஞ்சம் இரு இதயமும்
படபடக்கவும் செய்தது

எதில்தொடங்கி எதில்முடிக்க
வினவ நேரமில்லை அங்கே

வேணியை வருடியபடி
மருங்கினை தொடவே ஓர் விலகல்
அதுவும் மீண்டும்
இருக்கியணைக்கவே

கலைத்தும் கலையாதிருந்தது
அவள் நானம் அதையறிய நான் முழவுமிடத்தேன் மருங்கினில் சினுங்கினால்

மருவொன்றில் இப்படியொரு வசீகரம் இருக்குமென நான் ஒருபோதும் நினைத்ததில்ல

தேடிக்கிடைத்த கனிக்கே
சுவையதிகம் என்பேன் இங்கு

தேடல் புதிது
தேகம் தந்த
தாகம் புதிது

உரசல்கள் தீமூட்ட
உதடுகள் தேகத்தில் உலாவர
தீண்டாயிடமில்லை
வர்ணிக்க வார்த்தையுமில்லை

உன் கரங்கள் என் முதுகை கீர
உன்மேனி வாசம் வலியகற்ற
மதுகரமானேன் உன்பிடியில்

வியர்வை விருப்பமாக
கண்ணீரும் சுகமங்கே
வலிகளும் இனிமையங்கே
என்னால் நீ ஏற்றதனால்

எழுதியவர் : சே.இனியன் (12-Oct-17, 11:28 am)
Tanglish : avalum naanum
பார்வை : 727

மேலே