தருக்களை அழிப்போரை தயவின்றி தண்டிப்போம்
புல் பூண்டுகளுக்கும் உயிர் உண்டு
புவி வாழ்வதே அதை உண்டு
அள்ளக் குறையாத அட்சய பாத்திரம்
அதை சிதைத்தால் சபித்திடும் சாத்திரம்
உண்ட நீருக்கு நன்றி மறவாது
அண்டம் காத்திடும் சஞ்சீவ மருந்து
கண்டம் துண்டமாய் வெட்டி சாய்ப்பினும்
கண்கண்ட பலன் ஈயும் ஜீவவிருந்து
உற்சவ பூசையாய் போற்றிக் கைதொழின்
கற்பகத் தருவாய் ஆற்றிக் கனிந்திடும்
நவகிரகங்களை சுற்றின் பரிகாரம் கிட்டிடும்
உபவிருட்சங்களை பற்றின் கார்பொழில் பெருகிடும்
உயிர்வதை உயிர்கொலை சட்டத்தில் குற்றமென்றால்
உலகவுயிர்நிலை கொல்லுதல் மாபெரும் குற்றமன்றோ
அனைத்து உயிரும் சட்டத்தின்முன் சமமென்றால்
அருதருக்களை அழிப்போரை தயவின்றி தண்டிப்போம்!
கவிதாயினி அமுதா பொற்கொடி