ஆனந்த கண்ணீர்

உன் முகம் பார்க்கும் போதெல்லாம் ஆனந்தமாய் உன்னை எட்டி பார்க்கும் கண்ணீர்
இன்று உன் முகம் காணாததால் உதடு வரை வந்து கேட்கிறது எங்கே அவள் என்று
கனத்த குரலில் அவள் இனி வரமாட்டாள் உன் ஆனந்த கண்ணீர் துளிகளுக்கு
இனி வேலை இல்லை என்ற உடன் உதட்டின் வழியே வழிந்தபடி
தாடையில் இருந்து குதித்து தற்கொலை செய்கின்றன தரையில் வீழ்ந்து
ஒன்றின் பின் ஒன்றாக .என் ஆனந்த கண்ணீர் துளிகள் ,

எழுதியவர் : ராஜேஷ் (14-Oct-17, 12:04 am)
Tanglish : aanantha kanneer
பார்வை : 462

மேலே