சில துளி சொர்கங்கள்

சில துளி சொர்கங்கள்

எனக்கான
விடியலின்
கதிரொளியாய்
வருடிப் போகும்
உன் விழிகள்...
எனக்கான சொற்களை
நிரப்பிக் கொள்ள
ஆக்சிஜன் குழலாய்
உன் இதழ்கள்...
எனக்கான அழுகையில்
தலை சாய
ஆறுதலாய் என்றும்
உன் மடி...
எனக்குள்ளே வேர்விட்டு
எங்கேயோ தீவாக்கும்
சினத்தீ சிதைந்தழிய
சிறு தழுவல்...
மற்றெதுவும்
தேவையில்லை
மரித்துப் போகிறேன்
இக்கணமே!!

எழுதியவர் : தானியேல் நவீன்ராசு (13-Oct-17, 10:38 pm)
பார்வை : 183

மேலே