வெல்வோம் தோல்விகளை

ஆழக்கடலுக்கும் கரைகள் உண்டு!

ஏறாத மலைக்கும் ஒரு அடிவாரம் உண்டு!

ஒவ்வொரு வெற்றிக்கும் பல தோல்விகளும் உண்டு!

கரையில் நின்றால், கால்கள் நனையலாம்,
அலைகளை வென்று, ஆழ்கடலில் முத்தெடுக்க முடியுமா?

அடிவாரத்தில் இருந்தால், காற்று வாங்கலாம்,
பாறைகளை வென்று, உச்சியை எட்டி சாதிக்க முடியுமா?

தோல்விகளுக்குப் பயந்தால், பாரமாய் வாழலாம்,
தடைகளை வென்று, இலட்சியத்தை அடையமுடியுமா?


இடையூறுகளே, வெற்றியை நெருங்க வைக்கும்!

எண்ணத்தில் உறுதி கொண்டு, வெல்வோம் தோல்விகளை!

முயற்சிகள் வலுவாகும்! இலட்சியங்கள் ஈடேறும்!!

எழுதியவர் : வாடகைக்காரன். (14-Oct-17, 9:00 pm)
Tanglish : velvom tholvikalai
பார்வை : 660

மேலே