விட்டு வைக்கலாம் இல்லையா

எல்லோருக்கும், எப்போதும்
எவ்வித வேறுபாடும் கொள்ளாது,
இலைகளை,கனிகளை,வேர்களை,
தன் நிழலை, நல்ல காற்றை வழங்கும்,
மரங்கள் போல், நாம் இல்லைதான் !

ஆயினும்,

நமது வருங்கால தலைமுறைகளுக்கும்,
தன்னலம் இல்லா மரங்களின்
உன்னத சேவைகள் தொடர,

விட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டாமல் ?!

நட்டு வைக்கலாம் இல்லையா,
வெட்டிய இடமெல்லாம்?!

மரங்களைப்போல, மனங்கள் இல்லாவிடினும்,
பட்ட கடனுக்காகவாவது...?!

எழுதியவர் : வாடகைக்காரன். (14-Oct-17, 8:55 pm)
பார்வை : 1033

மேலே