தீபாவளி

அதிகாலையில் எழுந்து
காலைக்கடன்களை முடித்து
'கங்கை ஸ்நானம்' செய்து பின்
புத்தாடை உடுத்தி நெற்றி இட்டு
ஆண்டவனை கும்பிட்டு, பின்
இல்லத்தில் பெரியோர்
அனைவரையும் வணங்கி எழுந்து,
அன்னை அவள் நிவேதனம் செய்தபின்
அளித்த இனிப்பு சிற்றுண்டி ,உண்டு,
உடலுக்கு இதம் தரும்
'நாட்டு லேகியமும் 'சிறுது உண்டு
அக்காள் தங்கை, தாய், அண்ணி
மற்றும் இல்லத்தரசி இவர்கள்
ஏற்றிவைத்த தீபங்கள் பார்த்து ரசித்து
சற்றே வீட்டின் வாசலுக்கு வர
பொழுதும் விடிய சேவல் கூவ
வண்ண கோலமிட்ட வீட்டு வாசலில்
சிறுவர் குழாம் சூழ வெடி பானங்கள்
வெடித்து .............குதுகூலம்
அவ்வளவில் அங்கு இல்லது வாசலில் -நாதஸ்வரத்தில்
பூபாளம் இசைக்க மேளம் கொட்ட வாதியக்காரர்;
அக்கலைஞருக்கு சன்மானம் தந்து நிற்க ,
'பூம்' பூம், மாட்டுக்காரன் வந்து சேருகிறான்
'நெய்யாண்டி'மேளம் கொட்டி ' மாடு
தலை அசைக்க சிறுவர்கள் ரசிக்க.............
அவனுக்கும் வேண்டியது தந்து ,திரும்ப,
வீட்டிற்கு விருந்தாளிகள் ஒவ்வொருவராய்
வந்து போக 'கங்கை ஸ்நானம் ஆயிற்றா '
என்று அவர்கள் ஒவ்வொருவரையும் விசாரித்து
இனிப்புகள் வழங்கி உபசரித்து ................

இப்படியே காலையும், பகலும் கழிந்து
இரவும் வந்தது; ஊரெங்கும் குதூகலம்
வீடெல்லாம் விளக்கொளியில் மின்ன
தெருவெல்லாம் பட்டாசு, வான வேடிக்கைகளில்......
எங்கும் கும்மாளம், வேடிக்கை இன்பம் பொங்க...

தீபாவளி என்னும் தீப ஒளி ..............
இந்துக்களின் பெரும் பண்டிகை................

அது சரி................ ஏன் இந்த பண்டிகை
கொண்டாட்டம் ...........ஒவ்வொரு வருடமும்

இனி வருவது சிறுவர்களுக்கு என்றறிவீர் !

குழந்தைகளே, கேளுங்கள் சுருக்கமாய்
இதை சொல்லுகின்றேன், கேளுங்கள்....
புராணம் சொல்லுகிறது துவாபர யுகத்தில்
கண்ணபிரானுக்கும் அவன் மனைவி
சத்யபாமாவிற்கும் ஓர் மகன் பிறந்தான்
நரகன் என்று அவன் பெயர்...........
மாவீரனாய், ஆயிரம் யானைகள் பலம்
கொண்ட ராக்காத பலம் பெற்று
நரகாசுரன் என்றே அவனை, தேவரும்
மக்களும் அழைத்தனர்; சதவகுணம்
ஏதுமின்றி, ரஜோ,தமோ குணங்கள்
மிகுந்திருந்தது அவனிடத்தில் -வானவர்
தானவர் என்று எல்லோரையும் மிக்க
துன்பத்தில் ஆழ்த்த ,அவர்கள் வேண்ட
தந்தை கண்ணனே அவனை வதைக்க
போர்க்கோலம் பூண்டான்; மனைவி
பாமா தேரோட்டி வர நரகனை போருக்கு
அழைத்து போரில் நரகன் பாமா கையிலே
அடிபட்டு குற்றுயராய் கிடக்க
அத்தருணத்தில் அன்னையிடம் வரம் ஒன்று
கேட்கின்றான் அதுதான் அவன் இறந்த
தினத்தில், ஊரெல்லாம் தீபம் ஏற்றி
மிக்க கோலாகலத்துடன் கொண்டாட
வேண்டும் என்று-அவன் வேண்ட ,அன்னை
பாமா அவள் அதை அளிக்க அக்கணமே
அவள் காலடியில் உயிர் விட்டான்
நரகன் என்ற நரகாசுரன்
அந்நாளே இன்றும் நாம் நரக சதுர்த்தி
அல்லது தீபாவளி என்று
கொண்டாடுகிறோம்,அறிந்திடுவீர்
என் அருமை சிறுவர்களே ....................

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Oct-17, 8:25 pm)
Tanglish : theebavali
பார்வை : 92

மேலே