அந்த ஒரு கணம் மாறியிருக்க கூடாதா


ஒரு கண நேரம்

ஒரு கண நேரம்
மாறியிருக்க கூடாதா
இதயத்தின் இன்னொரு பக்கம்
உன்னுடையது என்றாய்
இடதா வலதா என்று கேட்காமல்
நானும் தலையாட்டினேன்

ஒரு கண நேரம்
மாறியிருக்க கூடாதா
கண்ணே காதலே என்றாய்
பிற்காலத்தில் காலவெள்ளத்தில்
அடித்து செல்லப்படுவேன்
என்று தெரியாமல்

ஒரு கணநேரம்
மாறியிருக்க கூடாதா
ஒருவருக்கொருவர்
அந்தரங்க ரகசியங்களை
அப்பட்டமாக பரிமாறி இருந்தோம்
அணுஅணுவாய் பேசி அனுபவித்து விட்டு

ஒரு நாள் தொலைபேசியில் முயன்ற போது
எல்லைக்கு வெளியே என்று வந்தது
உண்மைதான்
உண்மையிலேயே எல்லைக்கு வெளியே
சென்று விட்டதால்
அந்த ஒரு கணம் மாறியிருக்க கூடாதா

எழுதியவர் : முபாரக் அலி (27-Jul-11, 2:57 pm)
சேர்த்தது : mubarak ali
பார்வை : 415

மேலே