காலனே....நியாயமா?

தாய் நாட்டிற்க்காகத்தான்......,
தம்.....உயிர்.....,
சபதம்.....ஏற்றே.....,
சாகத்துணிந்தோம்.......!

அந்நியர்களின்....அத்துமீறலை.....,
அழிக்கவே...அழைப்பு......,
எல்லையோர.....எதிரிகளை.....,
எதிர்க்கவே......பயணம்.....!

புகைவண்டி.....புகுமுன்......,
தயக்கமின்றி......,
தாயகம்.....காக்க....,
வாழ்த்தி.....வழியனுப்பினார்கள்.......!

துப்பாக்கி கொண்டு.....துரத்தியடிப்போம்...,
பீரங்கிகொண்டு.......பின்னுக்குதள்ளுவோம்.....,
என்றே.....ஏறியமர்தோம்......,
எதிர்வரும்....எமனையறியாமல்.......!

கண்களில்....
நித்திரையோடும்,.....கனவுகளோடும்.....,
ஆழ்ந்தபொழுதே.......
அழைத்துக்கொண்டானே..........காலனே !

வீரமெல்லாம்......இப்படி......,
விபத்தோடு.....விரையமானதே....,
எங்களின்....உயிர்களை......,
ஏனோ.....வீணடித்துவிட்டானே!



(செய்தி:கார்கில் போருக்கு....ரயிலில் பயணம் செய்த 80 ராணுவ
வீரர்கள்.....விபத்தில் பலி.)

எழுதியவர் : கு. காமராஜ் (27-Jul-11, 2:30 pm)
சேர்த்தது : கு காமராசு புதுவை
பார்வை : 301

மேலே