புறப்பாடு

கோவில் விட்டுப் புறப்பட்டுக்
குவல யத்தோர் தரிசிக்க
ஆவ லாகப் பவனிவரும்
ஐயா உனது அடிபணிந்து
ஏவல் செய்து பிழைக்கின்றேன் !
எல்லாம் எனக்குத் தருவாய்நீ !
காவல் தெய்வம் நீயன்றோ ?
கர்ம வினைகள் தீர்ப்பாயே !

எழுதியவர் : கௌடில்யன் (16-Oct-17, 1:28 am)
சேர்த்தது : கௌடில்யன்
பார்வை : 127

மேலே