அன்பு எப்போதும் அப்படியே

என்னிடம் கேட்கும்
கேள்விகளை
உன்னிடம் கேட்டுப்பார்

உன் பதில் என்னவோ
அதுதான்
என் பதிலும்

என் பதிலுக்காக
நீ கோபித்துக் கொண்டால்
உன் பதிலுக்காக
நான்
வருத்தப்பட நேரும்

உனது கோபம்
எனது வருத்தம்

அன்பு எப்போதும்
அப்படியேதான் இருக்கும்
எப்படி இருந்தாலும் !

--மதிபாலன்

எழுதியவர் : மதிபாலன் (16-Oct-17, 3:02 am)
பார்வை : 337

மேலே