தாடியில் என்ன இருக்கிறது

?

தாடியைத் தடவுவதே
தங்களுக்கு இப்போதெல்லாம்
வாடிக்கை ஆகி விட்டது
என்றாள் மனைவி

கேடிப் பயலைப் போல்
விரல்களால் தடவித்
தேடித் தேடி நீர்
என்னத்தைக் கண்டீர்?

அந்த கருமத்தை
மழித்தாலாவது
முகம் கொஞ்சம்
பார்ப்பது போலிருக்கும்.

உலகினிற் பிறந்த
அறிஞர் அனைவரும்
நன்றாக குறித்துக் கொள்
அறிஞர் அனைவரும்
தாடி வைத்தவரே.

வித்தகர் என்றான
அத்தனை மனிதரும்
வைத்து இருந்தது
பைத்தியம் பிடித்தல்ல.

பைரட்ஸ் ஆஃப்
தி கரிபியன்
படத்தில் வரும்
ஜாக் ஸ்பாரோ
வைத்து இருப்பதோ
ஃப்ரென்சு ஃபோர்க்
அந்த காலத்து
முள் கரண்டியில்
இருமுகம் இருந்ததை
இதுவே சொல்லிடும்.

ஆஞ்செலினா ஜோலியின்
கணவர் ஆனவர்
பிராட் பிட் வைத்தது
டக் டெயில் ஆகும்.
கன்னத்தில் அடர்வின்றி
கீழொரு முடிவில்
வட்டமாய் முடிவது.

நங்கூர தாடி
என்றால் கன்னத்தில்
புச்புசுவெனக் கொண்டு
உதடுகளின் கீழ்
மயிரே இன்றி
விரல்கடைஅளவில்
அளவாய் வெட்டி
நங்கூரம் போலே
காட்சி அளிப்பது

ராபர்ட் டொளனீ
ஜூனியர் முகத்தில்
நங்கூரம் போலே
அசப்பில் இருந்தும்
சற்றே மாறுதல்
கொண்டது பால்போ

நீளாமாய்க் கொண்ட
பக்கக் கிருதா
மீசை உடனே
ஆசையில் இணைந்து
உதட்டின் கீழே
மயிரே இன்றி
இருப்பது ஃப்ரெண்ட்லி
மட்டன் சாப்ஸாம்

ஜோசெப் வெர்டி
எனும் இத்தாலிய
ஓபெரா வினைஞர்
வைத்தது போலே
முறுக்கிய மீசை
தாடியில் ஒட்டாமல்
பத்து செண்டி மீட்டர்
மட்டுமே மொண்டு
குத்தும் வகையில்
இருக்கும் தாடிக்கு
வெர்டி தாடி
என்பது பெயராம்

இத்தாலி தன்னை
ஒருங்கு இணைத்த
ஜோசப் கரிப்பால்டி
வட்டமாய் மீசை
தாடியில் வீழ்ந்திட
குறுகிடும் தாடி
வைத்தது போலே
இருப்பது கரிபால்டி
தாடி ஆகும்

மீசையே இல்லாத
கரிபால்டி தாடி
டச்சு தாடி என
நச்செனத் தெரியும்

தாடி அழகினைத்
தேடி எடுத்திட்டு
சங்கம் வளர்த்த
எரிக் பாண்டோல்ஸ்
அடர்வனம் போலே
முதலில் இருப்பினும்
கட்டுப் படுத்தி
வெட்டி வைப்பதாம்.

கன்ன வலை போல
இருந்தும் இல்லா
நிலையைக் காட்டும்
சின் கர்டன்
இன்றைய இளம்
பெண்கள் விரும்பிடும்
இனிய தாடியாகும்

ஜில்லெஸ்பீ என்பவர்
கீழ் உதட்டின் கீழே
கட்டை விரலில்
நகத்தின் அளவில்
நீளமின்றியே வளர
விட்டு இருப்பது
சோல் பாட்ச் ஆகும்.

கிளிங்கான் என்பது
ஸ்டார் ட்ரெக்கில்
கெட்ட மனிதர்
முகத்தில் கொண்ட
தனியே மீசை
தொங்கி இருக்க
தாடியோ கீழே
நங்கூரமாய் இருக்க
மழமழ கன்னத்தில்
பளபளத்து நிற்பது.

.

எழுதியவர் : தா. ஜோ. ஜூலியஸ் (16-Oct-17, 11:10 am)
பார்வை : 177

மேலே