இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
========================================ருத்ரா

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
எல்லா இல்லங்களிலும்
மகிழ்ச்சி பொங்கவேண்டும்!

யாரோ யாரையோ
வதம் செய்துவிட்டுப்போகட்டும்
புராணம் சொல்கிறது
கடவுளே தன் அசுரபுத்திரனை
வதம் செய்வதாய்.
நன்மை தீமையை அழிக்காது.
நன்மை தீமையையும் நன்மை ஆக்கிவிடும்.
அது தான் நன்மையின் இலக்கணம்.
எல்லா வல்லமைகளும் நிறைந்தவன் இறைவன்.
நமக்கு எப்போதும் முகம் காட்டிக்கொண்டிருப்பவன்.
நமக்கு அவன் முதுகுப்பக்கத்தை
காட்டுவது தான் இந்த அசுரபுராணங்கள்.
எப்படியோ
நம்மை நாம் அன்பு அறம் எனும்
ஒளிக்குள் வைத்துக்கொள்ளவேண்டும்.
இதற்கு
ஒரு உடலை சின்னாபின்னமாக சிதறச்செய்யும்
வெடிப்புகளின் உருவகம் தான் வேண்டுமா?
"பாசிடிவ்" உலகத்தைத்தான் நாம் பார்க்கவேண்டும்
என்று
சொற்பொழிவுகள் தருகின்ற சாமியார்கள்
கடவுளின் பத்துப்பன்னிரெண்டு கையில் வைத்திருக்கிற‌
அந்த ஆயுதங்களையும் கூர்படுத்தும்
"நெகடிவ்" மனப்பாடுகளை
விதைத்துக்கொண்டே
அருள்வாக்குகளை தருவதுதான்
கடைந்தெடுத்த முரண்பாடு.
கடவுளும் அசுர‌னும் வதம் செய்கிற‌
இந்த "புளூவேல்" விளையாட்டுகளை
என்றைக்கு நிறுத்தப்போகிறீர்கள்?

===============================================

எழுதியவர் : ருத்ரா இ பரமசிவன் (16-Oct-17, 5:47 pm)
பார்வை : 107

மேலே