மழை வரும் நேரம்

பச்சை பசுமை
வீட்டின் முன் நீரோடை
மழை வரும் முன்
மண் வாசம்,

மழை வந்தால்
கப்பல் விடலாம்
கரைசேருமுன்
நனைந்து விளையாடலாம்...

பானைகளில்
நீர் குதித்தோடும்
அம்மா சமைக்கும்
அடுப்பினருகில் குளிர்காயலாம்...

கஞ்சியோடு கருவாடும்
நடுங்கிகொண்டே
சாப்பிடலாம் ....

கூரை மண் தரையில்
ஓட்டை பாயில்
படுத்தாலும்
ஏசி காற்று
எங்களுக்கு கிடைக்கும்...

அந்த காற்று எங்களையும்
சூடாக்கவில்லை
,ஓசோனையும்
ஓட்டையாக்கவில்லை........

எழுதியவர் : சிபியா (16-Oct-17, 6:07 pm)
பார்வை : 242

மேலே