தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்

அன்பெனும் ஆனந்தம் இதுவென ஈன்றெடுக்கும்
உன் ஊக்கம் எனை ஏணி படியேற்றிட
ஐவிரலும் ஒரு வாழ்த்து மடல் புனைய
ஓயாமல் ஔவையின் இலக்கணம் தேடியும்
வெற்று பக்கத்தையே இப்பொழுதும்
அனுப்புகிறேன்
வார்த்தையின் இலக்கணத்திற்குள்
அடங்காத ஆழமான நட்புகளோடு
இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
தோழமையே

இப்படிக்கு
கொ.சசிகலா

எழுதியவர் : கொ.சசிகலா (18-Oct-17, 1:40 pm)
பார்வை : 479

மேலே