நண்பன்,அவன் நட்பு

நண்பன் அவன் நட்பு
ஓர் மெழுகு வத்தி
நின்று நிதானமாய்
எரியும் வத்தி
எரியும் வரை
இருளை நீக்கி
வெளிச்சம் தரும்
நண்பன் அவன் நட்பும்
அதுபோல அவன்
இருக்கும் வரை
நண்பனுக்கு ;
தன்னையே தந்து
இருளைப்போக்கும் வத்தி போல்.

எழுதியவர் : மிழ்பித்தன்-வாசுதேவன் (18-Oct-17, 5:24 pm)
பார்வை : 457

மேலே