நரகாசுரனுக்கு ஒரு வெடி

நரகாசுரனுக்கு ஒரு வெடி
================================ருத்ரா

மிகப்பெரிதாய் ஒரு வெடி வாங்கி
அந்த நரகாசுரன் மீது வெடித்தோம்.
அப்புறம் காகிதத்துகளாய்
சிதறிக்கிடந்தது உண்மைதான்.
ஆனால்
அது வெடியின் காகிதச்சிதறல் அல்ல.
வெடித்துச்சிதறியவன்
நரகாசுரனும் அல்ல.
அவையாவும்
காசுக்கு கொடுத்த நம் ஓட்டுசீட்டுகள்.
வெடித்து வீழ்ந்ததும்
நாம் தான்! நாம் தான்! நாமே தான்!
நரகாசுரன் நமக்குச்சொன்னான்
ஹேப்பி தீபாவளி! ஹேப்பி தீபாவளி!
ஆயிரம் அசுரன்களை
அழிக்கப்பிறந்தவன் இந்த‌
மானிட நரன்!
இவன் எப்படி நரகாசுரன் ஆவான்?
கடவுளுக்கும் உறைத்தது.
கடவுள் "கடவுள் சாட்சியாக சொன்னான்"
நான் கடவுள் இல்லை என்று.
காட்டுமிராண்டிகளுக்கெல்லாம் மூல‌
காட்டுமிராண்டி நான் தானே!
மனிதனை பாவம் செய்யவைத்துவிட்டு
அவனுக்கு
பாவத்தின் சம்பளம் மரணம் என்று
பட்டாக்கத்தியை அவனுக்குள்
பாய்ச்சுபவன் நான் என்றால்
நானே தான் காட்டுமிராண்டி!

=====================================

எழுதியவர் : ருத்ரா (18-Oct-17, 4:26 pm)
பார்வை : 52

மேலே