பன்னீர்ப் பூக்கள்
தினந்தோறும் தீபாவளி
தித்திக்கும் தீபாவளி
தெவிட்டாத தீபாவளி
தேன்சுவை கூட்டும்
தின்பண்டம் தின்பண்டம்
செல்வந்தன் வீட்டிலே ,
வருடத்தில் ஓர் நாள்
வறண்ட நெஞ்சங்களின்
வாசலிலே வரட்டுக் கவுரவம்
வறுத்தெடுத்து
வட்டிக்கு கடன் வாங்கி
தித்திக்க வைக்கும் இந்தத் தீபாவளி
ஏழைகளின் வேதனையில்
இனிமையா/ பந்தாவா / இதுவும் ஒருவகை
தீபாவளி
,இதிலும் ஒரு மவுசு பெருமை
சுமையுடன் இனிமையும்
சுமந்து செல்லும் தீபாவளி
ஏழைகளின் கண்களில்
பன்னீர் பூக்கள்