வள்ளுவன் அளந்தான்
இரு கோடுகள் வரைந்தான் வள்ளுவன்
ஒரு கோட்டினில் நாலு சீர் அமைத்தான்
மறு கோட்டினை சற்று குறைத்து முச்சீர் அமைத்தான்
ஈரடி குறட்பா என்றான் ; உலகம் அதனுள் அடங்கியது !
இறைவன் ஈரடியால் விண்ணையும் மண்ணையும் அளந்தான்
வள்ளுவன் ஈரடியால் உன்னையும் என்னையும் இவ்வுலகையும் அளந்தான் !
சிற்றடியால் பேருலக ளந்தான் இறைவன்
குறளடி யால்வள்ளு வன்.
----கவின் சாரலன்