ஸ்பரிச தேவதை

சேலை கட்டி வந்த சித்திர செவ்வானமே
ஆளை மயக்கும் அந்திவான வெண்ணிலவே
ஜிமிக்கி குலுங்கி ஆடுதடி காதினில்
புது மின்னல் வீசுதடி புன்னகை இதழினில்
நீ அசைந்து வரும் அழகை நதியலையும் நின்று பார்க்குதடி
உன் BODY LANGUAGE தமிழா இங்கலீஷா பிரெஞ்சா புரியவில்லையடி
உன் ஸ்பரிசம் பட ஏங்கித் தவிக்குதடி காதல் மனசு !
-----கவின் சாரலன்