வசமாகும் நெஞ்சே

பொதிகையிலே தவழ்தென்றல் புறப்பட்டு வந்து
பொருநைநதிக் கரையோரம் இதமாக வீச
நதிக்கரையின் வழிநெடுக வரவேற்பு கூறும்
நாணலதும் தலையாட்டிப் பதமாக ஆட
உதிராத மலரிதழில் மதுவுண்ட வண்டோ
உளமகிழ்ந்து சிறகசைய அழகாகப் பாட
மதிபூக்கும் முன்னிரவில் குளிர்ச்சியுடன் தானும்
மயங்கவைக்கும் இளங்காற்றில் வசமாகும் நெஞ்சே !

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Oct-17, 1:22 pm)
பார்வை : 133

மேலே