தேவதையே வா வா

ஆயிரம் நிலவொளி
உன் முகத்தில் வீசுதே
ஆயிரம் கனவுகள்
என் அகத்தி்ல் பேசுதே
நான்கு விழிகள் செய்யும்
காதல் போரில் மனசுகள் வெடிக்குதே...

சிறகுகள் இல்லையே
காதல் வானில் பறக்கவே
உதடுகள் ஏங்குதே உன்
பெயரை சொல்லவே
உன்பாதம் பட்ட மண்ணும் கூட
பொன்னாய் மாறுதே...

ஊமையின் வார்த்தைப்போல்
என் காதல் போகுதே
தேவதை உன்னிடம் என்
வீரம் சாகுதே
உன் பார்வை ஒன்றே போதும்
என்று என் மனசும் ஏங்குதே...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (21-Oct-17, 9:32 am)
Tanglish : thevathaiye vaa vaa
பார்வை : 309

மேலே