கரை படிந்த உள்ளம்

பெண்ணாய் பிறந்ததுவோ
பிடிப்பதில்லையே
பினை கைதியானேன்
பிழைநேரத்தில்
உனதுறுப்பால்
பெற்றெடுத்தவளே
உன்னிடம் சொல்ல முடியா
உணர்வுகளில் கரைப்படிந்த
உதிரங்கள் கொதிக்கிறது
ஆண் இனம் பிடிக்கவில்லை
ஆத்திரங்கள் வருகிறது
அழுக்குகளை பார்த்துவிட்டேன்
சொல்லி அழாத அவமானங்கள்
உறவுகள் கூட வேண்டாமென
தோன்றுகிறது
ஆனாகிப்போன பாவம்
அப்பாவுக்கு
தொட்டு பேச என்
பெண்ணியம் மறுக்கிறது.....