இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய்

நோக்கும் போதெல்லாம் உன் வண்டுருளும் கண்களால்
எனைப் பார்க்கும் உன் முத்திரைப் பார்வை
நித்திரையிலும் என்னைக் கோளாறு செய்யுதடி
அருகிலே எனைக் கண்டவுடன் முகம் நாணம் பூக்க
என்னை நோக்கிவிட்டு மின்னலெனப் பாய்ந்து சென்றாயே
நான் வீழ்ந்து விட்டேன் உன் வலையில்
அந்த நொடி முதல் என்னிதயம் உன் பெயர் சொல்லியே துடிக்குதடி
வரிகளுக்கு வசப்படாமல் முரண்டு பிடிக்கும் கவிதை போன்று
என் வர்ணனைக்கு வசப்படாமல் திமிறிக் கொண்டு நிற்கும் அழகுக் காரியே
இன்னும் என்னை என்ன செய்வதாக உத்தேசம் ?

ஆக்கம்
அஷ்ரப் அலி

எழுதியவர் : alaali (21-Oct-17, 12:26 pm)
பார்வை : 288

மேலே