இரண்டாம் தாயின் இரண்டு வருட நினைவலைகள்

வெற்றிலை தட்டு வெற்றிடமாய் இருந்ததில்லை உங்கள் கைகளில்...
உங்கள் சிவப்பு நிற உதடுகளின் முன்னால் யுவதிகளின் அழகு வர்ண பூச்சுக்கள் தோற்றுப்போயின...

ஆணில் ஐந்து
பெண்ணில் ஐந்தென
பத்து செல்வங்களை பக்குவமாய்
சுமந்தது உங்கள் கருவறை...

ஓலைக்குடிசையிலும்
ஒரு இறாத்தல் பாணிலும்
ஒரு புடி அரிசியிலும்
கச்சிதமாய் குடும்பம் நடத்தின
உங்கள் கரங்கள்...

இரட்டை குழந்தைகளின் அழுகுரலோடும்
நோய்வாய்ப்பட்டிருந்த கணவனோடும்
நாளாந்த செலவுகளோடும்
போராடிய போராட்டத்தில்
நீங்கள் வீரப்பெண்மனி தான்...

ஆலமர விழுதுகளைப்போல்
உங்கள் பேரப்பிள்ளை கூட்டங்கள்
சற்று அதிகமாவை தான்...
அவர்களின் குறும்பு செயல்கள்
உங்கள் கன்னத்தில் குழி விழும் செய்யுமளவிற்கு சிரிப்பை ஏற்படுத்தினாலும்
அவர்களின் அழுகையை
ஒரு போதும் உங்கள் இதயம்
தாங்கியதில்லை...

நீங்கள் சொல்லும் பழங்கால கதைகளின்
ரசிகர்கள் நாங்கள்..
திருமண இல்லங்களில் எங்கள்
மனதை திருப்திபட வைப்பது
உங்கள் முகம்..
திடீரென்ற பிரிவால்
திகைத்து போயுள்ளோம்..

உங்களுக்காய் எழுதும் கவியை
உங்களிடம் சமர்ப்பிக்க வழியில்லாததால்
என் கண்கள் குளமாகின்றன...

வருடங்கள் இரண்டு வழிந்தோடினாலும்
அன்னை காலடி பிடித்தழும்
குழந்தை போல் உங்கள்
நினைவுகள் என்றும் எங்கள் மனதோடு..

எழுதியவர் : (21-Oct-17, 12:31 pm)
பார்வை : 56

மேலே