இதை பாக்காதீங்க
இதை பாக்காதீங்க!
வெட்டியாய் வீணடித்த பொழுதுகளின் மதிப்பு தெரியுமா உங்களுக்கு?
மனிதர்களின் மாற்ற முடியா குணங்களை, தோற்ற அமைப்புகளை பற்றி கிண்டல் செய்த, கீழ்மைப்படுத்திய விரயம் செய்த நேரங்களை.
முன்னோக்கி மட்டுமே செல்லும் வாழ்க்கையில் பின் நடந்த நிகழ்வுகளின் பாதிப்புகளை அலசி அலசி அழுது கடந்த பொழுதுகளை.
அப்புறம் என்ன? பழையன கழிப்போம்! தொல்லை ஓய்ந்தது.
எதிர்காலத்தை எண்ணி பார்ப்போமா என்று 5 ஆண்டு , 10 ஆண்டு , வாழ்கை கனவுகளை இன்றையோடு பொருத்திப்பார்த்து திட்டங்கள் தீட்டாமல், ஏக்க பார்வைகளோடும் பொறாமை பதிவுகளோடும் அடுத்தவர் கூரையை எட்டிப்பார்த்து சப்புக்கட்டிய வேளைகளை.
சரி! எதிர்காலத்து வெற்றுக்கனவுகளும் ஓய்ந்தன.
வாங்க இக்கணம் செல்வோம்!
௦ நமக்கு உள் செல்லும் ஆக்சிஜென் ஒரு வேளைக்கு எவ்வளவு தெரியுமா? (25 மில்லி லிட்டர்ஸ்)
௦ ஒரு நிமிடத்தில் நமக்குள் இறக்கும் செல்களின் எண்ணிக்கை தெரியுமா?(300 மில்லியன்)
௦ ஒரு நொடிப்பொழுது நமது மூளை இயங்க எத்தனை கணினிகள் தேவை? (82944)
போதும்யா ! யார் கேட்டா உன் புள்ளி விவரங்களை?
புள்ளிகள் அறிவுப்பெருக்கத்திற்கல்ல!
நொடிப்பொழுதின் இறப்புகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டாம் என்பதற்காகவே!
ஒவ்வொரு நொடியும் உயிர்பெருக்கத்தை, வாழ்வு நெருக்கத்தை நினைவூட்டட்டும்!
டிக்... டிக்...டிக்...டிக்...
(இதை பாக்காதீங்க! சுதாரித்து கொண்டவர்கள் நிறைய டிக் டிக்குகளை சேமித்துவிட்டீர்கள். வாழ்க!)