புது காதலி குப்பைத்தொட்டி

உன்னை பார்க்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் உனக்காய் உருவாகின என்னில் புது புது வார்த்தைகளும் கிறுக்கல்களும். மரணமே சற்று மரணித்துப் போகுமடி உனக்காய் எழுத்தாணி முனையில், காகிதத்தின் மேல் நான் பதித்த வார்த்தைக் கோர்வைகளை கண்டால்... நீயோ அதன் அர்த்தம் அறியாமல், உணர்வுகளை முடமாக்கி கிழித்து குப்பைத்தொட்டியில் போடுகிறாய். அவ்வார்த்தைகளும் உன் உதடு தொடாமலே, ஒவ்வொரு முறையும் முத்தமிடுகிறது குப்பைத்தொட்டியை. அவ்வார்த்தைகளை படித்துவிட்டு இன்று உன் முன் நின்று நான்தான் அழகி என கர்வம் கொள்ளுதடி அந்த குப்பைத்தொட்டி......

எழுதியவர் : அரவிபாரதி (23-Oct-17, 11:51 am)
பார்வை : 134

மேலே