வேறொன்றும் இல்லை

உன்னை கட்டி அணைத்துக்கொண்டு
தூங்கும் கனவுகளையும்
உன்னை கெட்டியாக பிடித்துக்கொண்டு
நடக்கும் பொழுதுகளையும்
உன்னை ஒட்டி நின்றுகொண்டு வாழ்ந்து
முடிக்கும் வாழ்க்கையையும்
உன்னிடம் வெட்டியாக கொஞ்சம் பேசிக்கொண்டு
இருக்கும் மணித்துளிகளையும்
என்னிடம் சுட்டியாக பேசுவதை ரசித்துக்கொண்டே
இருக்கும் நிம்டங்களையும்
என்னிடம் எதுவுமே பேசாமல் நீ என்னை
பார்க்கும் அந்த நொடிகளையும்
என்னிடம் பதில் சொல்லாமல் நீ
வெட்கி நிற்கும் அந்த தருணத்தையும்
உன்னிடம் பேச ஆயிரம் இருந்தும் நான்
மவுனித்து நிற்கும் அந்த தருணத்தையும்
தான் யாசிக்கிறேன் நான்
வேறொன்றும் பெரிதாக இல்லை
தந்துவிடு கண்ணே

எழுதியவர் : சஹாயா சாரல்கள் (24-Oct-17, 1:41 am)
Tanglish : verontum illai
பார்வை : 240

மேலே