மதுபானம், அது வேனாம்

மதுபானம் மறந்திடு மனுசா - அது
மரணத்திற்க்கு மருந்திடுமே தினுசா

சாராயம் குடிச்சாதான் ஏறுது போதை -அது
சாவுக்கு ,நீ தேடிய சரியான பாதை

எதார்த்தமா தொடங்கும் பழக்கம் இது
எப்போதும் குடி என்று, இழுக்கும் அது

குடிக்க குடிக்க உனக்கு குதுகலம்
குடும்பம் அடிக்கடி ஆகுது போர்களம்

ஒரு பாட்டில் ரம்மு,ஒரு பாட்டில் பிராந்தி
ஒவரா அடிச்சிட்டு எடுக்குறியே வாந்தி

போதை ஏத்தி, உன் பொழப்ப கெடுக்குற
பொறுமை இழந்து,போக்கிரியா நடக்குற

கன்ட்ரோலே இல்லாம, உள்ள நீ ஊத்துற
கல்லீரல் வெந்துபோக,நொந்து போயி நிக்குற

வாழப்போகும் உன்நாட்கள் வருத்தப்பட்டு நிக்குதடா !
ஆறடிக்குழி ஒண்ணு, உன்ன எதிர்பாத்து ஏங்குதடா !

சரக்கு அடிச்சாதான் உன் சோகம் தீருமா
சரியா நீ இருந்தாதான் சந்தோஷம் போகுமா

மதுபானம் மறந்திடு மனுசா - அது
மரணத்திற்க்கு மருந்திடுமே தினுசா !.....

எழுதியவர் : தங்க பாண்டியன் (25-Oct-17, 3:21 pm)
பார்வை : 3702

மேலே